அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பழனி முருகன் கோவிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமாக பஞ்சாமிர்தம் விளங்குகிறது. மலைவாழை, கற்கண்டு, நெய், கரும்புசர்க்கரை, தேன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவைமிகுந்ததாக தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமானது அதிகளவில் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
Atishi Marlena Singh: ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பு; நாட்டின் மிக இளம் முதலமைச்சர்- யார் இந்த அதிஷி சிங்?
இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலம் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் திருக்கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்கள் வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்த டப்பாக்கள் விலை மூன்று வகையாக பிரிக்கப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Samsung Protest : போராடும் சாம்சங் ஊழியர்கள்.. வழக்கு பதிவு செய்த காவல்துறை.. தொடரும் பதற்றம்...
அதன்படி குறைந்த பட்சமாக 20 ரூபாய்க்கும், பெட்ஜார் 40 ரூபாய்க்கும், சீல் டின் 45 ரூபாய் என பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பபட்டு வருகிறது. பழனி கோவில் நிர்வாகத்தால் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தரமான முறையில் தயாரிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதுவரை பஞ்சாமிர்தம் தயாரிப்பு தேதியின் காலக்கெடு 15 நாட்கள் வரை இருந்து வந்த நிலையில் , திடீரென கோவில் நிர்வாகம் அனைத்து வகையான பஞ்சாமிர்த டப்பாக்களும் 30 நாட்கள் வரை வைத்து சாப்பிடும் வகையில் என பஞ்சாமிர்த டப்பாக்களில் காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளது.
Breaking News LIVE: டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு!
குறிப்பாக சென்ற ஆண்டு இதே நாளில் பஞ்சமிர்தத்தின் விலையான 455 கிராம் நிகர எடை கொண்ட பஞ்சாமிர்தம் பிளாஸ்டிக் டப்பா ரூபாய் 35க்கும், பஞ்சாமிர்தம் டின் ரூபாய் 40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் விலை உயர்த்தப்பட்டு பஞ்சாமிர்தம் விற்பனை விலையானது முன்னறிவிப்பின்றி திடீரென உயர்த்தப்பட்டதும், இதன்படி பஞ்சாமிர்த டப்பா மற்றும் டின் வகைகளுக்கு தலா 5 ரூபாய் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்பட்டது. மாதம் பலகோடி ரூபாய் வருமானம் தரும் பழனி கோவில் பிரசாதத்தின் விலையை உயர்த்தியது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் வருடந்தோறும் பஞ்சாமிர்தத்தின் விற்பனை விலை என்பது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது காலாவதியாகும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது பல்வேறு தரப்பினரிடையே பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.