கொடைக்கானலில் பழைய ஒரு வழி பாதை வழியாக சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என மோயர் சதுக்கம் , குணா குகை, பைன் மர காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




பிரபலமான சுற்றுலா தலம்:


மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.


Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?




போக்குவரத்து பாதை மாற்றம்


கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருந்த நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாற்று வழி சாலைக்கான சாலைகளை தேர்வு செய்ததன் அடிப்படையில் கொடைக்கானலில் இருந்து வில்பட்டி வழியாக ஐந்து வீடு, பாரதி அண்ணா நகர்,  உள்ளிட்ட பகுதிகளை கடந்து பெருமாள் மலை சந்திப்பு செல்வதற்கான மாற்று வழி சாலை தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.




"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!


கடையடைப்பு போராட்டம்


இந்த சூழலில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் பிரதானமாக பயன்படுத்தும் சாலையாக அப்சர்வேட்டரி சாலை இருந்து வந்தது. இந்த சாலை ஒரு வழிப்பாதையாகவும் சுற்றுலா பயணிகள் சென்று மறுபுறமாக பாம்பார்புரம் சாலை வழியாக ஏரிச்சலை வந்தடைவர். தற்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி பாம்பார்புரம் வழியாக ஒரு வழி பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஒரு வழி பாதை மாற்றத்தின் காரணமாக பலருக்கும் வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது .




இந்த நிலையில் கொடைக்கானலில் பழைய ஒரு வழி பாதையை அமல்படுத்த வேண்டும் என கூறி மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மர காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதிலும் வெறுச்சோடி காணப்படுகிறது. மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண் பாறை பகுதியில் மட்டும் ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .