காவிரி டெல்டா மற்றும் மலை சாலைகளில் உறுதித் தன்மை இல்லாத சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சரி செய்யப்படும் என்ற விதிகளை தளர்த்தி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்தார்.




திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலக சுற்றுலாத்தலமாகும். இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருந்த நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாற்று வழி சாலைக்கான சாலைகளை தேர்வு செய்ததன் அடிப்படையில் கொடைக்கானலில் இருந்து வில்பட்டி வழியாக ஐந்து வீடு, பாரதி அண்ணா நகர்,  உள்ளிட்ட பகுதிகளை கடந்து பெருமாள் மலை சந்திப்பு செல்வதற்கான மாற்று வழி சாலை தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.




இதில் மாற்றங்களும் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் முதற்கட்ட ஆய்வுகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, தொடர் கோரிக்கை தொடர்ந்து இன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும், தயார் செய்து மாற்று வழி சாலை விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு மலைசாலைகளில் புதிய தொழில்நுட்பமாக மண்னாணி ( soil nailing) என்ற திட்டம் கண்டறியப்பட்ட இடத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு ஒரு சில இடங்களில் நிலச்சரிவு தடுக்கப்பட்டு இருக்கிறது.




அதேபோன்று கொடைக்கானலிலும் மண்ணாணி முறையில் மண் பரிசோதனை செய்யப்பட்டு நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் கண்டறியப்படும். மாற்று வழி சாலை காண விரிவான திட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். மேலும் நெடுஞ்சாலை துறையால் அமைக்கப்படும் சாலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சரி செய்யப்படும் என்று இருக்கக்கூடிய விதிகளில் கொடைக்கானல் போன்ற ஒரு சில மலைசாலைகளில் மண் உறுதித் தன்மை இல்லாததால் சாலைகள் விரைவில் சேதம் ஆகிறது. இதனை தடுப்பதற்காக காவிரி பாசன பகுதிகள் மற்றும் ஒரு சில மலை சாலைகளில் உறுதித் தன்மை இல்லாத இடங்களை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சரி செய்யப்படும். சாலைகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாக சரி செய்யப்படும் என தெரிவித்தார்.




தமிழகம் முழுக்க நெடுஞ்சாலையில் உள்ள இடங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தங்களுடைய சொத்து போன்று அதனை காக்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத்துறையில் உள்ள சிறந்த அதிகாரிகளை தேர்வு செய்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டு சாலைகளின் உறுதி தன்மையை கண்டறியும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் மாற்று சாலைக்கான முதற்கட்ட ஆய்வால் கொடைக்கானல் மக்கள் போக்குவரத்தினர் இருந்து தப்பித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் என நிம்மதி அடைந்துள்ளனர்.