திண்டுக்கல் பெரிய கடை வீதியில் ஜேஜே ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை நடத்தி வந்த ஸ்ரீகாந்த் அவரது மனைவி மகாலட்சுமி இருவரும் இணைந்து திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் புதிய நகை செய்து தருவதாகவும் அதேபோல் நகை சிறுசேமிப்பு திட்டத்திலும் 1 கோடி ரூபாய் மேல் மோசடி செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.


திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகை கடைகள் உள்ளது. இங்கு திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நகை வாங்கி செல்வது வழக்கம் .


Israel - Hmas War: நள்ளிரவில் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் மரணம்.. இஸ்ரேல் விரையும் பைடன்




இந்நிலையில் திண்டுக்கல் ஜேஜே ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை பி வி தாஸ் காலனியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி இருவரும் துவக்கி பொதுமக்கள் மாதாந்திர நகை சிறுசேமிப்பு திட்டத்தையும் துவக்கி உள்ளனர். இதில் திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், செம்பட்டி, ஆத்தூர், வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து  நூற்றுக்கணக்கான  ஆண்கள், பெண்கள் ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் என மாதாந்திர சிறு சேமிப்பு நகை திட்டத்தில் இணைந்துள்ளனர்.


Navratri 2023 : நவராத்திரி விழாவால் கோலகலமாக காட்சி அளிக்கும் காஞ்சிபுரம்..! பக்தி வெள்ளத்தில் பக்த கோடிகள்..!




அதேபோல் புதிய நகை செய்வதற்காக 2 லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை திண்டுக்கல் நகரை சேர்ந்த ஆண்கள் பெண்கள் பணம் கொடுத்துள்ளனர் . தொடர்ந்து பொதுமக்களிடம் சுமார் 1 கோடிக்கு மேல் வசூல் செய்த ஜேஜே ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி மகாலட்சுமி இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடையை பூட்டிவிட்டு தலைமறைவு ஆகினர். கடை பூட்டி இருந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்த வாரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதன் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் இன்று 30க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினர்.


Navratri 2023 : நவராத்திரி விழாவால் கோலகலமாக காட்சி அளிக்கும் காஞ்சிபுரம்..! பக்தி வெள்ளத்தில் பக்த கோடிகள்..!