திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள கொம்பேறி பட்டி பகுதியில் இன்று ஒரு நபர் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சுற்றி திரிந்துள்ளார். கடந்த சில நாட்களாக ஒட்டன்சத்திரம் பகுதியில் புகுந்த மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்தது. இதனால் அந்த நபரைக் கண்ட பொதுமக்கள் அவர் குழந்தைகளை கடத்த வந்த நபர் என்று நினைத்து அவரைப்பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், அவரை சுற்றி வளைத்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப 108 ஆம்புலன்சை வரவழைத்தனர்.


1967ம் ஆண்டு இதே நாள்! தமிழ்நாட்டில் திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள் - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!




ஆனால் பொதுமக்கள் அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைக்க மறுத்து போலீசாரிடமும், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆம்புலன்சை மீண்டும் எடுத்துச்சென்றுவிட்டார். பொதுமக்கள் தாக்கியதால் கிறங்கிய அந்த நபரை, மனிதநேயமிக்க பொதுமக்கள் சிலர் மீட்டு தண்ணீர், டீ மற்றும் பிஸ்கட் கொடுத்து தேற்றினர். அதனைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்திக், ராஜலிங்கன், கிருஷ்ணவேனி தலைமையிலான போலீசார் மற்றும் கொம்பேறிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்தனர்.


DMK - VCK Alliance: நெருங்கும் தேர்தல் - அடம்பிடிக்கும் விசிக - 3 தொகுதிகளை கொடுக்குமா திமுக? இன்று 2ம்கட்ட பேச்சுவார்த்தை




அதன்பின்னர் அந்த நபரை வேறு ஒரு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சிகிச்சைக்கு பிறகு அந்த நபரை மனநல காப்பகத்தில் சேர்க்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து, குழந்தைகளை கடந்த வந்த நபர் பிடிபட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுபோல் தவறான வதந்திகளை பரப்புவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.