கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் கேலண்டுல்லா மலர்கள்.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு சுற்றுலா இடங்கள் இருந்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் இடங்களில் ஒன்றாக பிரையன்ட் பூங்கா இருந்து வருகிறது. இங்கு 61வது மலர் கண்காட்சிக்காக பல்வேறு மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.


kerala Lok Sabha Election 2024: இடுக்கி மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் பொதுமக்கள்


தற்போது கேலண்ட்டுல்லா என்னும் மஞ்சள் நில மலர்கள் பூத்துக் குலுங்கி வருகிறது. இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் இதனை கண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். வரும் மே மாதம் மலர் கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர் , பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயங்கர காட்டுத்தீ 100 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் பற்றி எரிந்து வருவதால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.


வெளிமாநில தேர்தல்: தொழிலாளர்களுக்கு விடுப்பு இல்லையெனில் கடும் நடவடிக்கை - தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். தற்போது கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வந்த நிலையில் இன்று கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட கிராமங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களிலும் 100 ஏக்கர் பரப்புக்கு மேலாக உள்ள இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.


"அடுத்த ஜென்மத்தில் வங்க தாயின் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன்" - பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!




நேற்று துவங்கிய காட்டுத் தீ இன்று மளமளவென பரவி எரிந்து வருகிறது. தொடர்ந்து எரிந்து வரக்கூடிய காட்டுத்தீயின் காரணமாக புகைமண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது. மேல்மலை கிராமங்களில் உள்ள வனப் பகுதிகள் மேலும் வனப்பகுதியில் இருக்கக்கூடிய வன விலங்குகளும் இந்தப் பகுதியை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் காட்டுத்தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடிய வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது மேலும் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் கடும் புகை மண்டலத்தால் புகைமண்டலம் சூழ்ந்தவாறு சாலைகளை கடக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.