தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் விசேசமான மிகவும் பிரிசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள குல தெய்வ வழிபாடு என்பது அப்பகுதிகளில் பல்வேறு சிறப்புகளும் தனித்துவத்தையும் பெற்றுள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்ததாக கருத்தப்படும். ஒவ்வொரு கோவில்களிலும் குறிப்பாக சித்திரை மாத திருவிழா என்பது மிகவும் சிறப்பானதாக அமையும். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவது, அன்னதான விருந்து கொடுப்பது என சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் விழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அமைந்துள்ளது.


Theni Public Holiday: தேனி மாவட்டத்திற்கு மே 10ம் தேதி விடுமுறை அறிவிப்பு - காரணம் என்ன?




அந்த வகையில், பழனியை அடுத்த கோம்பைபட்டி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியதுரையான் கருப்பணசாமி கோவில். பழமையான இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பெரியதுரையான் கோயில் சித்திரைத்திருவிழா தொடங்கி நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 500 ஆட்டு கிடாய்கள் மற்றும் 300 கோழிகள் கருப்பணசாமிக்கு பலிகொடுக்கப்பட்டது.  இன்று அதிகாலை 3 மணிமுதல் கிடாய் மற்றும் கோழிகள் வெட்டப்பட்டது.


Covishield Side Effects: கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவு.. ஒப்புக்கொண்ட நிறுவனம்.. பகீர் கிளப்பும் அறிக்கை..!




பின்னர் பத்தாயிரம் பக்தர்களுக்கு  வெட்டப்பட்ட ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை, இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டு பெரிய அளவிலான பாத்திரங்களை பயன்டுத்தி உணவுகள் தயார் செய்யப்பட்டன. இன்று மதியம் சமைக்கப்பட்ட உணவகளை, அருள்மிகு பெரியதுரையான் கருப்பசாமி கங்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இத்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துகின்றனர். பெரியதுரையான் கோவிலில் விவசாயிகள் வளர்த்து கிடாய் வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.