வேடசந்தூரில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்ய போலீசார் முயன்றபோது தப்பியோடிய குற்றவாளிகளுக்கு ஒருவருக்கு கை மற்றவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை குற்ற சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருகிறது. குறிப்பாக நெல்லை திண்டுக்கள், உட்பட தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது சமத்துவபுரம் அருகே மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உடல் வைக்கப்பட்ட வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு மாசியின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுமோகன் மற்றும் சரவணன் ஆகிய 2 பேர் நேற்று வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதைத்தொடர்ந்து வேடசந்தூர் காவல்துறையினர் சரணடைந்த இரண்டு பேரையும் வேடசந்தூருக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய காவல்துறையினர் பெரியகவுண்டம்பட்டி அருகே உள்ள பெரியகுளம் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது இரண்டு பேரும் காவல்துறையினரிடம் இருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர்.
போலீசார் அவர்களை பிடிக்க முயற்சித்த போது தவறி கீழே விழுந்து மதுமோகனுக்கு வலது கை எலும்பு உடைந்தது. சரவணனுக்கு இடது காலும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து மாவுக்கட்டு போடப்பட்டது. தொடர்ச்சியாக வேடசந்தூரில் உட்கோட்டத்தில் நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்களில் இரண்டு பேருக்கு கால் முறிவு ஒருவருக்கு கை முறிவும் ஏற்பட்ட சம்பவம் சந்தேகத்தைப் ஏற்படுத்தி வருகிறது. ஆயுதங்கள் எடுக்க சென்ற இடத்தில் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. என்று காவல்துறையினர் கூறுவது நம்புறது மாதிரி ஒன்றும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.