சிவகங்கை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடிதாக்கி 100 நாள் பணியில் ஈடுட்ட 3 பெண்கள் பலி. உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

புளிய மரத்தடியில் நின்றபோது இருவர் மீதும் இடி தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்

 

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியை சேர்ந்தவர் வசந்தி (44) மற்றும் சின்ன சோமநாதபுரத்தை சேர்ந்தவர் கவிதா (46). இருவரும் கல்லல் அருகே உள்ள புதுகுளத்தான் கண்மாயில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான பணிக்காக சென்றுள்ளனர். பிற்பகலில் வேலை முடிந்து குருந்தம்பட்டு கிராம சாலையின் வழியாக வீடு திரும்பிய போது  மழை தூறியுள்ளது, மழைக்காக அருகில் உள்ள புளிய மரத்தடியில் வசந்தா மற்றும் கவிதா ஆகிய இருவரும் ஒதுக்கி உள்ளனர். அப்போது திடீரென  இடி இடித்து இதில் மரத்தின் கீழ் ஒதுக்கிய இருவர் மீதும் இடி தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த கல்லல் காவல் நிலையத்தினர் நிகழ்விடம் வந்து, உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு கூராய்விற்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 


 

 

ஒரே நாளில் மாவட்டத்தின் 3 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

இதே போல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் அனுமந்தக்குடி அருகே லெக்கமாரி கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் (75). இவரும் 100 நாள் வேலை வாய்ப்பு பணிக்கு சென்று வீடு திரும்பிய போது  இடிதாக்கி சம்பவ இடத்தில் பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த தேவகோட்டை தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் இடிதாக்கி 100 நாள் பணியில் ஈடுபட்ட 3 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.