திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி மாலதி. இந்நிலையில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 2023ம் ஆண்டு மனைவியின் தலையில் கல்லை போட்டு திருமூர்த்தி படுகொலை செய்தார். இது தொடர்பாக பழனி தாலுகா போலீசார் திருமூர்த்தி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


 




தற்கொலை முயற்சி:


இந்நிலையில்  திருமூர்த்தி தற்பொழுது மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்திற்கு திருமூர்த்தி மதுரை மத்திய சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இரண்டாவது மாடியில் மகிளா நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. போலீசாரால் அழைத்துவரப்பட்ட திருமூர்த்தி யாரும் எதிர்பாராத நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.


IPL 2024 RCB vs SRH: இமாலய இலக்கை நிர்ணயிக்குமா கம்மின்ஸ் படை? டாஸ் வென்ற ஆர்.சி.பி பவுலிங் தேர்வு!




மருத்துவமனையில் அனுமதி:


பலத்த காயமடைந்த திருமூர்த்தியை உடனடியாக போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு தற்பொழுது திருமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . நீதிமன்றத்தின் மாடியில் இருந்து குற்றவாளிகள் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பது என்பது  இரண்டாவது சம்பவம் ஆகும். இதேபோல் கடந்த மாதம் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஷாஜகான் என்ற குற்றவாளி  ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஹா என்ன வரிகள் 2: "மெத்த வாங்குனேன் தூக்கத்தை வாங்கல..." ஆறுதலாக வருடும் பூங்காற்று திரும்புமா!


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)