திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து நத்தம் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி கூறும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் நத்தம் பகுதியில் முளையூர் லிங்கவாடி பரலளிபுதூர், மூங்கில்பட்டி, ஊராளிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பின் சமுத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது பொருத்தம் இல்லாதது வேறு வழியில்லாமல் அவர்கள் நடத்துகின்றனர். மத்திய அரசு ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 க்கு பின் நடத்தவில்லை 21 இல் நடத்த வேண்டியது நடத்தவில்லை. ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக நிதி மசோதாவின்போது நான் பேசியுள்ளேன் மக்கள் தொகை கணக்கெடுப்பையும் ஜாதிவாரிய கணக்கெடுப்பையும் இணைத்து சொல்லி உள்ளோம்.
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
மாநில அரசு நடத்துவதால் எந்த பயனும் இல்லை. புள்ளி விவரத்திற்காக வைத்துக் கொள்ளலாமே தவிர, மத்திய அரசு நடத்துகின்ற சென்சசை இருந்துதான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எஸ்சி எஸ்டி மாநிலத்திற்கான மக்கள் தொகை இதன் அடிப்படையில் தான். இது அனைத்துமே 15 ஆவது நிதிக்குழு மானியம் இதன் அடிப்படையில் தான் வரும். இது இரண்டுமே அவசியமானது. மத்திய அரசாங்கம் அதை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்றார்.
நத்தம் அருகே பரளிபுதூர் சுங்கச்சாவடி அதிக கட்டணம் வசூலிப்பது குறித்த கேள்விக்கு எம்.பி பதிலளித்ததாவது: நிச்சயமாக முறையிடுவோம் இது எங்களது கவனத்திற்கு வந்தது. பொதுவாகவே சுங்கச்சாவடிகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் பேசி உள்ளோம் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் முடிவடைந்த சுங்கச்சாவடிகளில் மீண்டும் வசூலிக்கும் ஏற்பாடுகள் நடக்கிறது. ஆகவே,
அது எந்த எந்த சுங்கச்சாவடிகள் பட்டியல் எடுத்து கட்டணங்கள் குறைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேசி உள்ளோம். தூத்துக்குடியில் இருந்து கல்கத்தாவிற்கு ஒரு லாரி சென்று வர வேண்டும் என்றால் 49 ஆயிரம் ரூபாய் வரை டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டும். டோல்கேட் கட்டணம் என்பது தற்போது விலைவாசிக்கு மேல் மக்களுக்கு சுமையாக உள்ளது. இந்த பகுதியில் கூட விவசாயிகளுக்கு இது போன்ற பிரச்சனை இருக்கிறது. உள்ளூர் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது ஏற்கனவே NHAIயில் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) அனுமதிக்கப்பட்ட விதிதான். அந்த விதியின் கீழ் இவர்களுக்கு ( உள்ளூர்வாசிகள்) அடையாள அட்டை வழங்கி இலவசமாக சுங்கச்சாவடி பயன்படுத்துவதற்கான முயற்சியை நான் எடுப்பேன் என அவர் பேசினார்.