நிலச்சரிவினால் சொந்தங்களையும், உடைமைகளையும் இழந்து வாழும் வயநாடு மக்களுக்கு உதவி செய்வதற்காக திண்டுக்கல்லில் மொய் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உதவிக்கரம் நீட்டினர்.
கடவுளின் தேசம் என அழைக்கப்படும் தென்னிந்திய மாநிலமான கேரளா, பலருக்கும் பிடித்த சுற்றுலா தலமாக இருக்கிறது. அந்த ஊரின் சினிமாவை தாண்டி அங்குள்ள இடங்களுக்கும் மக்கள் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில், வயநாடு மாவட்டம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.
“மா மதுரை” விழா: காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! என்ன ஸ்பெஷல்?
தென்மேற்கு பருவ காலம் தொடங்கிய நிலையில், மழை கொட்டித்தீர்த்தது. இதனால் எதிர்பாராத விதமாக வயநாடு எனும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரும் அளவில் பாதித்துள்ளது. 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் பல மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மும்மரமாக நடந்து வர, சினிமா பிரபலங்கள் பலர் கேரள அரசுக்கு நிவாரண நிதி கொடுத்து உதவி வருகின்றனர்.
ஆபரேஷன் போது பெண் வயிற்றினுள் மருத்துவ உபகரணம்: ரூ. 7.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பிரியாணிக்கடை, திண்டுக்கல் ஹோட்டல் அசோசியேஷன் மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் இணைந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு உதவி செய்வதற்காக மொய் விருந்து நேற்று (07.08.24) இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. இந்த மொய் விருந்து திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடையில் நடைபெற்றது. இந்த மொய் விருந்தில் தோசை, பரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் நெய் சாதம் ஆகியவை வழங்கப்பட்டது.
Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்; நீர்வரத்து 2வது நாளாக 10,000 கன அடியாக் நீட்டிப்பு
இங்கு சாப்பிட வருபவர்கள் சாப்பிட்டு முடித்த பின் இலைக்கு அடியில் தங்களால் முடிந்த உதவித்தொகையை வைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வந்த வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் உணவை அருந்திவிட்டு நிவாரண உதவி தொகையை இலைக்கு அடியிலும், கடை முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலிலும் செலுத்தினர். இதில் ஒரு சிறுவர் உண்டியலில் சிறுக, சிறுக சேர்த்து வைத்த சில்லறை காசுகளை நிவாரண நிதிக்காக உண்டியலில் செலுத்தினார்.
இது மாதிரியான மொய் விருந்து மூலம் கிடைக்கப்பெற்ற பணம் வயநாடு நிவாரணத்திற்காக அனுப்பப்படும் என தெரிவிக்கப்படிருந்தது. மேலும், மொய் விருந்து நடைபெறும் கடையில் வெளியே 7 மணி முதல் பொதுமக்கள் கூடினர். மேலும் இந்த மொய் விருந்தில் திண்டுக்கல்லை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது உதவி மனப்பான்மையை வெளிப்படுத்தினர்.