தேசிய அளவில் மாநில அளவில் வெற்றி பெறும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு அந்தந்த துறைகளில் வேலை வாய்ப்புகளில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.


Ayodhya Ram Mandir: அயோத்தி ராமருக்கு உண்டியல் காணிக்கை இவ்வளவா! ஒரு மாதத்திலேயே இத்தனை கோடியா?




பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சியில் மூன்றரை கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஒன்பதரை கோடி மதிப்பில் 27 ஏக்கரில் புதிதாக கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழாவில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.


Rain Alert: தென் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு...நாளைய நிலவரம் என்ன? ... வானிலை தகவல்!




விழாவில் பேசிய அமைச்சர், தேசிய அளவில் மாநில அளவில் விளையாட்டு துறையில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பில் மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சமூக நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தி அரசாணை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.  பின்னர் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எழுகாம்வலசு கிராமத்திற்கு புதிதாக பேருந்து சேவையை அமைச்சர் துவக்கி வைத்தார்.


PM Modi Chennai Visit: மக்களவைத் தேர்தல் - தமிழகத்தை குறிவைக்கும் பாஜக - மார்ச் 4 பிரதமர் மோடி சென்னை வருகிறார்..!


இரண்டு தலங்களில் தங்கும் வசதி சமையலறை உடைமாற்றும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கூடிய புதிதாக கட்டப்படும் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை வரும் டிசம்பர் மாதம் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டன.