10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திண்டுக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் வாபஸ்.. மத்திய அரசு முடிவுக்கு காரணம் என்ன?




01.04.2023 பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக வரன்முறை படுத்த வேண்டும்.


TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு; எழும் கேள்விகள் என்னென்ன? தேர்வர்கள் அதிருப்தி..




IRS Officer: நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பேசிய ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன் சஸ்பெண்ட்..! நடந்தது என்ன?


அரசின் பல்வேறு துறைகளில் 30% க்கு மேலாக  காலியாக உள்ள பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி திண்டுக்கல் எம்ஜிஆர் சிலை முன்பு சாலையில்  அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்த எந்த திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.