திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியான மலைகளின் இளவரசி என அழைக்கப்படும்  மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை மட்டுமின்றி, பறவை, வனவிலங்குகள் உள்ளிட்டவற்றையும் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.


Aruna Sairam: கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது..




கொடைக்கானல் மலைப்பகுதியை பொறுத்தவரையில் 60 சதவீத பகுதிகள், வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் அரியவகை விலங்கினங்களும், பறவை இனங்களும் உள்ளன. இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பறவை அணில் என்று அழைக்கப்படும் அரியவகை மலபார் அணில்கள் உள்ளன. இவை ஆங்காங்கே மட்டும் தென்பட்டு வந்தது. இதற்கிடையே தற்போது மலபார் அணில்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.


AFG vs SL T20 WC: ஹசரங்கா, தனஞ்செய டி சில்வா அபாரம்..! ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி..!




குறிப்பாக கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதிகளான வெள்ளி நீர்வீழ்ச்சி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள‌ மரங்களில் மலபார் அணில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த அணில்கள் சோலை மரங்களில் இருக்கும் கொட்டாப்பழம், ஜாமூன் பழங்களை உண்டு வாழ்ந்து வருகின்றன. மேலும் சோலை மரங்களில் இருந்து பழங்களை மலபார் அணில்கள் உண்பதால், அதன் எச்சம் மூலமாக மீண்டும் வனப்பகுதியை உருவாக்குகின்றன.


"சுயநலமாக விளையாடாதீங்க… அணிக்காக விளையாடுங்க" - வர்ணனையில் பாபர் அசாமை விமர்சித்த கம்பீர்!




மேலும் இந்த அணில்கள் மரங்களில் மட்டும் வாழ கூடியவையாகும். இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள், மரங்களில் தாவிக்குதிக்கும் மலபார் அணில்களை ஆர்வத்துடன் கண்டு ரசிப்பார்கள். ஆனால் கொடைக்கானல் வரும் வாகனங்கள் அதிக சத்தத்துடன் ஒலி  எழுப்புவதால் மலபார் அணில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் மீது வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்து மலபார் அணில்களை பாதுகாக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண