டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட பிரச்னையில் மதுபாட்டிலால் ஒருவரை குத்திய நபருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொடைக்கானல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பெரும்பாறையை சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு இவர், அதே பகுதியில் உள்ள அரசு மதுபான  கடைக்கு சென்றார். அங்கு இருந்த கடை ஊழியரான சக்திவேலிடம் இவர், இலவசமாக மதுபானம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது சக்திவேல் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அங்கு கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து சக்திவேல் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

Udayanidhi Stalin: உதயநிதி திறமையான இளைஞர்; வருங்காலத்தில் மிகப் பெரிய பொறுப்புகளை வகிப்பார்- அமைச்சர் பொன்முடி 

விபூதியின் நறுமணம்.. அரோகரா கோஷம்.. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடந்த லட்சதீப விழா

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கொடைக்கானல் ஜூடிசியல்  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக், குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.


திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே உள்ள இ.பி.காலனியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தாடிக்கொம்பு போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 34 கிலோ கஞ்சாவை பதுக்கியதாக தெத்துப்பட்டியை சேர்ந்த வைரவன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வைரவன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே கஞ்சா வழக்கில் கைதான 10 பேரின் சொத்துகளை முடக்கும்படி திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் உதவி காவல் கண்காணிப்பாளர்  அருண்கபிலன் தலைமையிலான தனிப்படையினர் நடவடிக்கையில் இறங்கினர். இதில் வைரவன் உள்பட 10 பேருக்கு சொந்தமான வீடு, நிலம், வாகனங்கள், வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் என மொத்தம் ரூ.17 லட்சத்து 20 ஆயிரத்து 629 மதிப்பிலான சொத்துகளை போலீசார் முடக்கினர். இதேபோல் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெயரில் இருக்கும் சொத்துகள் முடக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண