திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தையம் ஊராட்சி வெடிக்காரன் வலசு பகுதியில் சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் அரளி குத்து குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தைச் சுற்றி சுமார் 35 கிராம பகுதிகளுக்கு இந்த குளம் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்தின் பாசனத்திற்கும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு இதனை தரிசு நிலமாக மாற்றி அந்த பகுதியில் சிப்கோ தொழிற்சாலை அமைப்பதற்கு அதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.
"தார்மீக, அரசியல் தோல்விக்கு பிறகும் ஆணவம் தொடர்கிறது" பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளித்த கார்கே!
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக இதற்கு உங்களுடைய கருத்தை தெரிவிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் பொதுமக்களும், பாட்டாளி மக்கள் கட்சியினரும், பாரதிய ஜனதா கட்சியினரும் ஒன்று கூடி இதனை முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவிப்பதாக கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன் பின் கடந்த சனிக்கிழமை அன்று திமுக சார்பாக சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு சிப்கோ தொழிற்சாலை வேண்டுமென வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் இன்று வந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வரிசையாக காத்திருந்து சிப்கோ தொழிற்சாலை வேண்டாம் என்று இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் நாங்கள் குடிநீருக்கு சிரமப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றும் தொழிற்சாலை வேண்டாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
பொதுமக்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா பாரதிய ஜனதா கட்சி மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வட்டாட்சியர் சசி அவர்களிடம் மனு அளித்தனர்.