திண்டுக்கல்லில் தமிழகத்திலேயே முதல்முறையாக நூலக நண்பர்கள் திட்டத்தை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தொடங்கி வைத்தார்.

Continues below advertisement


தமிழக பொது நூலகத்துறை மூலமாக நூலக நண்பர்கள் திட்டம் திண்டுக்கல்லில் நேற்று துவங்கப்பட்டது இந்தத் திட்டத்தினை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். திட்டத்தின் நோக்கமே அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதாகும். திட்ட துவக்க விழாவில் உணவுத்துறை அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி எம்எல்ஏ செந்தில்குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், நூலகத்துறை இணை இயக்குனர் அமுதவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Avatar 2 Review: 13 ஆண்டு காத்திருப்பு; எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா அவதார்-2?.. - நேர்த்தியான நறுக் விமர்சனம்!



துவக்க விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ள 350 தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கைப்பை வழங்கப்பட்டது. பின்னர் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்திலேயே முதல் முறையாக திண்டுக்கல்லில் நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டத்தை துவக்கி உள்ளோம். இந்த திட்டத்திற்காக ரூ.56.25 லட்சம் செலவு செய்ய உள்ளோம். செலவு என சொல்வதை விட அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கான முதலீடு என்றுதான் சொல்ல வேண்டும்.


CIFF 2022: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இன்று திரையிடப்படும் திரைப்படங்கள் என்னென்ன? - முழு விபரம் உள்ளே




Lionel Messi: "தேங்க் யூ கேப்டன்… இது கோப்பைக்கு அப்பாற்பட்டது!" : பத்திரிகையாளரிடம் நெகிழ்ந்த மெஸ்ஸி


12,500 தன்னார்வலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்தத் திட்டத்தில் 15 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க உள்ளோம். ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் 25 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. அவர்கள் மூலம் குழந்தைகள், வயதானவர்கள், குடும்பப் பெண்கள் பயனடைவார்கள். வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. ஊர்புற நூலகர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள  பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண