பழனியில் புதியதாக திறக்கப்பட்ட செல்போன் கடையில் மிகக்குறைந்த சலுகை விலையில் செல்போன் உபகரணங்களை விற்பனை செய்ததை கண்டித்து செல்போன் வியாபாரிகள் ஒன்றுகூடி கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய கடையின் செயலுக்கு போட்டியாக கடையின் முன்பு சாலையில் செல்போன் கவர்களை வைத்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் பொதுமக்கள் முண்டியடித்து செல்போன் கவர்களை வாங்கி சென்றனர். 


Manish Sisodia: கிடுக்குப்பிடி..மேலும் 5 நாள்களுக்கு காவல்...சிசோடியாவுக்கு தொடர் சிக்கல்..!


திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முகமது ஆரிஃப் என்பவர் ரயில்வே ஃபீடர் சாலையில் புதியதாக செல்போன் கடை ஒன்றை திறந்தார்‌. கடை திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செல்போன் கவர்கள், செல்போன் டெம்பர் கிளாஸ்கள் ஆகியவற்றை முதல் 5 நாட்களுக்கு மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்வதாக அறிவித்தார்.  


Ind Vs Aus 1st ODI Live: முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி


இதையடுத்து நேற்று முதல் புதியதாக திறக்கப்பட்ட செல்போன் கடையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதை கண்டு ஆவேசமடைந்த மற்ற செல்போன் கடை வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கத்தலைவர் முகமது நாகூர் மீரான் என்பவர் தலைமையில் புதியதாக திறக்கப்பட்ட கடைமுன்பு குவிந்தனர். தொடர்ந்து புதியதாக கடை திறந்த முகமது ஆரிஃபுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செல்போன் உபகரணங்களை விலை குறைவாக விற்பனை செய்வதால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக சலுகைவிலையில் வியாபாரம் செய்வதை நிறுத்தவேண்டும் என்றும் தெரிவித்தனர்.


Kannai Nambathey Review : 'கண்ணை நம்பாதே' நம்பி தியேட்டருக்கு போகலாமா? படம் எப்படியிருக்கு? முழு விமர்சனம் இதோ!


ஆனால் தனது செல்போன் கடையில் தான் இலவசமாக கூட பொருட்களை கொடுப்பேன், உங்களுக்கு என்ன பிரச்சனை என்று முகமதுஆரிஃப் எதிர்கேள்வி எழுப்பினார். இதனால் ஆவேசமடைந்த செல்போன் வியாபாரிகள் அனைவரும் புதிய கடையின் வாயில் முன்பு  மேஜைகளை போட்டு செல்போன் கவர்கள் மற்றும் உபகரணங்களை பத்து ரூபாய்க்கு விற்க துவங்கினர்‌. தொடர்ந்து முகமது ஆரிஃப் தனது விற்பனையை நிறுத்தும் வரை தாங்கள் கடைமுன்பு வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்தனர்.


India Vs Australia ODI Series : பவுலிங்கை எதிர்கொள்ளமுடியாமல் அளறிய ஆஸி.. ஈசி வெற்றியை அடையுமா இந்திய அணி?


இதையடுத்து பத்து ரூபாய்க்கு செல்போன் கவர் கொடுப்பதை அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்போன் கடை வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய கடை திறப்புவிழா குறித்து வைக்கப்பட்ட பேனர்களில் சலுகை விலை குறித்து அறிவித்துள்ளதால் தங்களால் வியாபாரம் செய்யமுடியவில்லை என்றும், பொதுமக்களிடம் தகராறு ஏற்படுவதாகவும் கூறினர்.




மேலும் உடனடியாக கடை முன்பு வைத்துள்ள பேனர்களை   அகற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பேனர்களை அகற்ற முகமதுஆரிஃப்  சம்மதித்தார். விலை குறைவாக விற்பனை செய்யும் கடை முன்பு செல்போன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.