நிலக்கோட்டையில் காவல் நிலையம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குற்ற வழக்குகளில் உள்ள வாகனங்களில் திடீர் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள காவல் நிலையத்தில், நிலக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குற்ற வழக்குகள் மற்றும் விபத்துகளில் சிக்கியுள்ள கார், வேன், இருசக்கர வாகனங்கள், மாட்டுவண்டி என ஏராளமான வாகனங்கள் வத்தலக்குண்டு மதுரை சாலையில் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள பழைய பேருந்து நிலையம் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதியின் பின்புறம் இப்பகுதி குடியிருப்பு மக்கள் குப்பைகளையும் கொட்டி வருகின்றனர்.


TN CM MK Stalin: கொடைக்கானல் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.. மே 4-ஆம் தேதி சென்னை திரும்புகிறார்..




இந்நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென வாகனங்கள் நிறுத்திய பகுதியில் தீப்பிடித்தது. தீ மளமளவென பற்றி எரியத் துவங்கியதால் எதிரில் உள்ள காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் தகவல் அறிந்து  உடனடியாக  தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வர வர தாமதமானதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரிந்த தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தீயை அணைக்கும் முயற்சியில் நிலக்கோட்டை காவல் துறையினரே ஈடுபட்டனர். தனியார் தண்ணீர் வாகனங்களை வரவழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


Avadi Double Murder Case: அதிரவைக்கும் ஆவடி இரட்டைக் கொலை.. செல்போனை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை!




இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் ஒரு சில வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாயின. திடீரென ஏற்பட்ட சம்பவத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பல்வேறு வாகனங்கள் தீயில் எரிந்தது.  திடீர் தீ விபத்து குறித்து நிலக்கோட்டை காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.