தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் இருந்தாலும் உரிய அனுமதி பெற்று வெயில் காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டும். விலை மதிக்க முடியாத உயிர்கள் இந்த வெப்ப சலனத்தில் பறி போகிறது. அதை வேடிக்கை பார்க்கிறது இந்த அரசு என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு, உத்தப்பநாயக்கணூர், செல்லம்பட்டி, சேடபட்டி, எழுமலை உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும், அதற்கு எல்லாம் அனுமதி பெற்று நீர் மோர் பந்தல்களை திறந்து வருகிறோம். இந்த வெப்ப சலன காலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் உள்ளன அதை விடுத்துவிட்டு வெறும் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மக்கள் மீது அக்கரை இல்லாமல் ஒரு முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்., என்பது அறிக்கை மூலமே தெரிகிறது. தேர்தல் காலத்தில் பேரிடர் காலம் எனும் போது, பருவநிலை மாற்றத்தின் போது விதிமுறைகளை தளர்த்திக் கொள்ளலாம்.
முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
வெறும் அறிவிப்பு மட்டும் போதாது, தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை பெற்று, மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வெயில் தாக்கம் இல்லாத நேரங்களில் தொழிலாளர்களுக்கு பணியை கொடுக்கலாம், விலை மதிக்க முடியாத உயிர்கள் இந்த வெப்ப சலனத்தில் பறி போகிறது. அதை வேடிக்கை பார்க்கிறது இந்த அரசு. மனிதர்கள் மட்டுமல்லாது, கால்நடைகளும், விவசாய நிலங்களும் கருகி வருகிறது. அவற்றிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று மக்களை பாதுகாக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வெளியேவே வர வேண்டாம் என சொல்லும் முதல்வர் அதற்கான நிவாரணங்களை வழங்க வேண்டும்” எனப்பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Latest Gold Silver Rate: வார இறுதியில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. சவரனுக்கு மீண்டும் ரூ.120 அதிகரிப்பு..
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - சிவகங்கை : கண்மாய் மடையை வழிபடும் கிராம மக்கள்.. 280 கிடாய் வெட்டி விருந்துண்டு மகிழ்வு..