திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான‌ல் - பழனி பிரதான மலைச்சாலை பில்லூர் எஸ்டேட் அருகே சுமார் 100 அடி ப‌ள்ள‌த்தில் சொகுசு கார் ஒன்று கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த அன்பரசன் என்பவரை இந்த‌ பிர‌தான‌ சாலையில் ப‌ய‌ண‌ம் செய்த‌ வாக‌ன‌ ஓட்டுன‌ர்க‌ளும், இப்ப‌குதியின‌ரும் இணைந்து 100 அடி ப‌ள்ள‌த்தில் இற‌ங்கி க‌விழ்ந்த‌ காரில் இருந்து லேசான‌ காய‌ங்களுட‌ன் மீட்டு 108 ஆம்புல‌ன்ஸ் மூல‌ம் கொடைக்கான‌ல் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த‌ன‌ர்.


Watch Video: ரியல் ஹீரோ! காற்றாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவர்களை தனி ஒருவனாக மீட்ட இளைஞர்!




இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் குறித்து விரைந்த கொடைக்கான‌ல் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர். இந்த‌ விப‌த்தினால் பில்லூர் எஸ்டேட் ப‌குதியில் சிறிது நேர‌ம் போக்குவ‌ர‌த்து பாதிப்பு ஏற்ப‌ட்ட‌துட‌ன் ப‌ர‌ப‌ர‌ப்பும் நில‌விய‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.


அப்போ கமலுக்கு 3 வயசு இருக்கும்.. மேடையில் நினைவுகளை பகிர்ந்த நடிகர் சிவாஜி!




இதுகுறித்து விபத்துக்குள்ளானவரிடம் கேட்டபோது, தான் த‌ஞ்சாவூரை சேர்ந்த‌ அன்ப‌ர‌ச‌ன் (40) என்றும், அங்கு  முல்லைந‌க‌ரில் தனது இரு குழந்தைகளுடன் வ‌சித்து வ‌ருவ‌துட‌ன் சொந்த‌மாக‌ க‌ம்ப்யூட்ட‌ர் சென்ட‌ரும் ந‌ட‌த்தி வ‌ருவதாகவும் கூறினார். மேலும் குடும்ப‌ பிர‌ச்னை கார‌ண‌மாக‌ த‌ற்கொலை செய்ய‌ முடிவெடுத்து, அதற்காக கொடைக்கான‌லை தேர்வு செய்ததாகவும் கூறினார்.




அதனை தொடர்ந்து, த‌ன‌து சொகுசு வாக‌ன‌மான‌ ட‌ஸ்ட‌ர் வாக‌ன‌த்தில் த‌னி ஒருவ‌னாக‌ ப‌ழ‌னி பிர‌தான‌ ம‌லைச்சாலை வ‌ழியாக வரும் போது பில்லூர் எஸ்டேட் அருகே சுமார் 200 அடி பள்ளத்தில் வாக‌ன‌த்தை க‌விழ்க்க‌ முற்ப‌ட்டதாகவும், அப்போது ப‌ள்ள‌த்தில் க‌விழ்ந்த‌ வாக‌ன‌ம் சுமார் 100 அடி ப‌ள்ள‌த்தில் உள்ள‌ ம‌ர‌த்தில் மோதி வாக‌னம் பாதியிலேயே நின்றதாகவும், அதனை தொடர்ந்து அங்கிருந்த சிலர் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும் அன்பரசன் தெரிவித்தார்.




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண