திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட பண்ணைப்பட்டி, கோம்பை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் தோட்டங்களில் உள்ள தென்னை, மா மரங்களை சேதப்படுத்தின.இந்த நிலையில் கன்னிவாடி அருகே உள்ள பண்ணைப்பட்டியில் தனியார் தோட்டத்துக்குள் 8 காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன.




இதையடுத்து அந்த யானைகள் அங்கு இருந்த தென்னை, மா மரங்களை தின்று சேதப்படுத்தின. இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள், கன்னிவாடி வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கன்னிவாடி வனச்சரக ஊழியர்கள், வேட்டைதடுப்பு காவலர்கள் பண்ணைப்பட்டிக்கு சென்றனர். அங்கு தனியார் தோட்டத்துக்குள் முகாமிட்ட காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இந்த நிலையில்  வேட்டை தடுப்பு காவலர்கள், பட்டாசு வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் தோட்டத்தில் இருந்து வனப்பகுதியை நோக்கி செல்ல தொடங்கியது. அந்த காட்டு யானைகளை பின்தொடர்ந்து வேட்டை தடுப்பு காவலர்கள் சென்றனர். அப்போது அவர்கள் தொடர்ந்து பட்டாசு வெடித்தனர்.




அதில் ஒரு காட்டு யானை, ஆக்ரோஷத்துடன் வேட்டை தடுப்பு காவலர்களை நோக்கி ஓடி வந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பி ஓடினர். அதில் குயவநாயக்கன்பட்டியை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர் சுந்தரம் (51) என்பவர், அந்த காட்டு யானையிடம் சிக்கி கொண்டார். அவரை அந்த காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது. பின்னர் காலால் அவரை மிதித்தது.




இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுந்தரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த வன அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காட்டு யானை மிதித்து பலியான சுந்தரத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த சுந்தரத்துக்கு சுமதி என்ற மனைவியும், தாயுமானவன் (22), சுந்தரபாண்டியன் (20) என்ற 2 மகன்களும் உள்ளனர். காட்டு யானை மிதித்து வேட்டை தடுப்பு காவலர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 


TN Minister meet Governor: நாங்க போகமாட்டோம்.. ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு! விவரம் சொன்ன அமைச்சர்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண