திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துஆவாரம்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி வில்லியம். இவரது மனைவி தெய்வானை. இவர்களது 2½ வயது மகள் ஓவியா. இன்று காலை கணவன்-மனைவி 2 பேரும் தங்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். உடன் மகள் ஓவியாவையும் அழைத்து சென்றனர். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த ஓவியா திடீரென்று மாயமானாள். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி தங்களது மகளை தேடி பார்த்தனர்.


இதற்கிடையே தோட்டத்தில் குப்பைகள் கொட்டுவதற்காக சுமார் 3 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அந்த குழியில் தண்ணீர் தேங்கி, குட்டையாக மாறியது. அந்த குட்டையில் ஓவியா மயங்கி கிடந்தாள். இதனை பார்த்த அந்தோணி வில்லியம், தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.


Rasipalan November 19: ரிஷபத்துக்கு சோர்வு... மேஷத்துக்கு அமைதி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!


ஆனால் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஓவியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குட்டையில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.




திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தை சேர்ந்தவர் பாண்டி (35). இவர் கடந்த ஆண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் திண்டுக்கல் அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


TN RAIN: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. எங்கெல்லாம் கனமழை?




அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா  நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார்.


இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.