கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் வயது 35. டேங்கர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருடன் கிரண் என்பவர் கிளீனர் ஆக உடன் வந்தார். இவர் பெங்களூருவில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் சென்று இறக்கிவிட்டு மீண்டும் பெங்களூர் நோக்கி திரும்பி கொண்டு  பெட்ரோல் டேங்கர் லாரியை ஓட்டி வந்தார். 


Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. மீண்டும் உருவாகிறது ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்




திண்டுக்கல் பழனி பைபாஸ் ரோட்டில் உள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் வந்தபொழுது லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி பாலத்தில் சுவரை உடைத்துக் கொண்டு இரண்டு பாலங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் தொங்கியபடி கீழே விழுந்தது. இதில் லாரி ஓட்டி வந்த மற்றும் உடன் வந்த கிளீனர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 


அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி முருகன், தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், திண்டுக்கல் மேற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 




போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் உடனடியாக போக்குவரத்தை சரி செய்தவுடன் லாரியை மீட்டனர். திண்டுக்கல் துணை தீயணைப்பு துறை நிலை அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை ஈடுபட்டனர். 


Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!




போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த பாலத்தின் வழியாக பழனி கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் செல்லும் வழியாகும். நல்ல வேலையாக இந்த லாரி கவிழ்ந்த நேரத்தில் எந்த ஒரு வாகனமும் இந்த பாலத்தை கடக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ நேரத்தில் தமிழ்நாடு அரசு பேருந்தின் திண்டுக்கல் யூனிட் 3 சென்ற பேருந்து நூலிலையில் பெரும் விபத்திலிருந்து தப்பியது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த டிரைவர் சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.