தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.  அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வழுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது நாளை பிற்பகலில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


திடீரென மாறிய வானிலை: 


நேற்று  பிற்பகலில் வந்த வானிலை அறிக்கைப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, கரையை நெருங்கும் போது வலுவிழந்து மீண்டும் தாழ்வு மண்டலமாகவே  கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டிருந்தது, அதன் பிறகு நேற்று மாலை நிலவரப்படி புயல் உருவாகாது என்றும் தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இன்று காலை நிலவரப்படி இந்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து தென் கிழக்கே 380 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று புயலாக மாறும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்தார். இது மேலும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


இதையும் படிங்க: Rain News LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை


புயலாகவே கரையை கடக்கும்:


இந்த புயலுக்கு ஃபெங்கல் என்று ஏற்கெனவே பெயரிடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


சென்னயில் மழை: 


வங்கக்கடலில் நிலவு வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழத்திற்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.