டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், முல்லை பெரியாறு ஒரு போக பாசன பகுதியை பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், பல்வேறு வரலாற்று மற்றும் தொல்லியல் சின்னங்கள் உள்ள மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பல்லூயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மேலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பாரம்பரிய சின்னங்கள், இயற்கை வளங்கள், பல்லுயிர் தளங்கள் மற்றும் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால்,
வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து, டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். முல்லைப் பெரியாறு ஊருக்கு போக பாசன விவசாய பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் விதமாக, பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் உள்ள மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, வெள்ளலூர், கோட்டநத்தம்பட்டி, கிடாரிப்பட்டி அ.வல்லாளப்பட்டி நரசிங்கம்பட்டி, அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் சங்கம் புறக்கணிப்பு
மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து மேலூரில் திரையரங்கம், மருந்தகம், உணவகம் உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்ட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மேலூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து மேலூர் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது.
டங்ஸ்டன் சுரங்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, டங்ஸ்டன் சுரங்கஉரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேள்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்!