தருமபுர ஆதீன மரத்திற்கு சொந்தமான திருச்சி உஜ்ஜீவநாதர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த பொது நல மனு. ஆதீன மடங்களில் தொன்மையான பழமையான மிகவும் பிரபலமான மடங்களில் தருமபுர ஆதீன மடமும் ஒன்று தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் கலாச்சாரங்களை பறைசாற்றும் மடங்களில்  இதுவும் ஒன்று இந்த மடத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு நிலங்களும் கோயில்களும் உள்ளன கோயில்களை தருமபுர ஆதீன மடம் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

 

தற்போது விலை உயர்ந்த பல்வேறு நிலங்கள் மூன்றாம் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருச்சியில் உள்ள உலக புகழ் பெற்ற உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. 

 

இந்த கோவிலுக்கு அருகே சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலங்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த இடம் குறித்து கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆதீனத்திற்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையும் ஆக்கிரமிப்பு நபர்களிடமிருந்து இடம் மீட்கப்படவில்லை இதுகுறித்து பல தடவை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே பல கோடி மதிப்புள்ள தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடங்களை மீட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி தருமபுர ஆதீன மரத்திற்கு சொந்தமான இடங்கள் அளவீடு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இதனை  தொடர்ந்து, கோவில் நிலங்கள் மீட்பது குறித்து அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படுவது குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.