மொழிஞாயிறு தேவநேய பாவணர் தமிழ்மொழி மற்றும்  தமிழர்கள் பற்றிய ஆய்வுகளில் தனது முடிவுகளில் தெளிவாகவும் உறுதியாகவும் நின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் மொழி ஆய்வாளராக திகழ்ந்த தமிழ்மொழி என்பது இயற்கையான மொழி எனவும், உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி  தமிழே, திராவிட மொழிகளுக்குத் தாய் , ஆரியத்திற்கும் மூலம் தமிழ்மொழி  என உரக்க சொன்னவர் மொழிஞாயிறு தேவநேய பாவணர். உலகத் தமிழ் கழகம் என்ற பெயரில் தனித்தமிழ் இயக்கம் ஒன்றை தொடங்க போராடி வெற்றி கண்ட மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் மணிமண்டபம் மதுரை சாத்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது.



 

இதில் மணிமண்டப காப்பாளராக தேவநேயபாவணரின் பேத்தியான ஏ.எம்.டி.பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் அரசு உதவியாளர் பணி ஆணை வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தேவநேய பாவாணர் மணிமண்டபத்தை அவருடைய பேத்தி சிறப்பாக நிர்வகித்து வந்தார்.



 

இந்த நிலையில் கடந்த மாதம் 2ஆம் தேதி 57 வயதான பரிபூரணம் தண்டுவட பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 12 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.