தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகிறது. கொசு கடியால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மூன்று நாட்களுக்கு மேலாக தீவிரமான காய்ச்சல், தலைவலி, உடலில் அலர்ஜி, மூட்டு மற்றும் தசைகளின் வலி இருப்பது டெங்கு காய்ச்சலில் அறிகுறிகள் என கூறப்படுகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. ஆனால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவு முறைகள் மூலம் டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் ஒரே நாளில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேருக்கு டெங்கு பாதிப்பு மாவட்ட முழுவதிலும் நாள்தோறும் டெங்கு பாதிப்பு அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.




மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் ஏடிஎஸ் கொசுக்கள் உருவாகி அதன்மூலம் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 2வாரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோருக்கு பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகிய சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதிகளில்  7 குழந்தைகள் உட்பட  15 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்று வரை மதுரை மாவட்டத்தில் 11 குழந்தைகள் 14 சிறுவர்கள உட்பட 51 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைபெற்றுவருகின்றனர். மதுரை மாவட்டத்தில் பெரும்பாலும் 1 முதல் 5 வரையிலான குழந்தைகள் மற்றும் 10 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கும் டெங்கு பாதிப்பு அதிகளவிற்கு ஏற்பட்டுவருவது  பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மழை காரணமாக ஆங்காங்கே அரசு மற்றும் வணிக கட்டிடங்களில் மழை நீர் தேங்குவதாலும், மாநகராட்சி பகுதிகளில் நீண்ட நாட்களாக அள்ளாத குப்பைகளில் மழைநீர் தேங்கி அதன் மூலமாக டெங்கு கொசுக்கள் அதிகளவிற்கு உற்பத்தியாகி பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுவருகிறது. மாவட்ட முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையிலும் மாநகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே மலைபோல குப்பைகள் தேங்கி கிடக்கும் அவலம் நீடிக்கிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் அதிகளவிற்கு காய்ச்சல் பரவல் இருந்துவருவதால் சில பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது.





ஏ.டி,எஸ்., கொசு பட்டப்பகலில் தந்திரமாக மனிதர்களை கடிக்கும் தன்மையுடையது. டெங்கு கொள்ளை நோய் வடிவில் பரவும் ஒரு வைரஸ் காய்ச்சல் ஆகும். டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும் பொழுது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் பரவுகிறது. குடியிருப்புகள் , நிறுவனங்கள், அலுவலகங்களில் வெளிப்புறங்களில் உள்ள உபயோகமற்ற பொருட்களை உடனடியாக அகற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துதல், ஈக்கள் மொய்க்கும் உணவு பொருட்களை தவிர்த்தல் மற்றும் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்” - என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பணியாளர் வெறுங்கையால் சாக்கடை சுத்தம் பெய்யும் அவலம்; பெரியகுளம் நகராட்சி மெத்தனம்