உசிலம்பட்டி அருகே உள்ள எருமாபட்டியை சேர்ந்தவர் மாயி (55) இவரது மகள் பவித்ரா (25). பவித்திராவிற்கும் உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியை சேர்ந்த பூவேந்தர் (27) என்பவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று நான்கு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது, இதன்காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்படதன் காரணமாக, பவித்ராவை அவரது தந்தை மாயி பழனிச்செட்டிட்டி  முருகன் கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளனர். 




இன்று பிற்பகல் பழனிச்செட்டிபட்டி வீட்டிக்கு தனது நண்பருடன் வந்த மூவேந்தர்  கத்தியால் தனது மனைவி பவித்ராவையும் தடுக்க வந்த பவித்ராவின் தந்தை மாயியையும்  குத்தி கொலை செய்துவிட்டு  இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் போது பூவேந்தருடன் வந்த அவரது  நண்பர் முருகேசனை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய பூவேந்தரை பேலீசார் தேடி வருகின்றனர்.




வைகை அணைக்கு முன்புறமுள்ள தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் சுழலில் சிக்கியதில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்ராஜ் என்பவரது மகன் லோகேஸ்வரன், செல்வம் என்பவரது மகன் சுந்தரபாண்டி. இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வரும் நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து வைகை அணைக்கு முன்புறம் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றனர். குளித்து கொண்டிருக்கும் போது தடுப்பணைக்கு முன்புள்ள ஆற்று சுழலில் சிக்கியதில் லோகேஸ்வரன் சுந்தரபாண்டி ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.




இதையடுத்து நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வைகை அணை காவல்துறையினர், தீயணைப்பு துறை உதவியுடன் தண்ணீரில் மூழ்கிய இரண்டு கல்லூரி மாணவர்களின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து வைகை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தடுப்பனையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது