திருப்பூரில் கம்பெனி ஒன்றில் பணியாற்றக்கூடிய நபர்கள் சிலர் சுற்றுலாவிற்காக தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்ட பகுதிக்கு 407 சுற்றுலா வாகனத்தில் சுற்றுலா வந்துள்ளனர்.


இந்த வாகனத்தினை கோகுல் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களாக தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று மாலை மீண்டும் சொந்த ஊரான திருப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென பெண் ஒருவர் சாலை கடக்க முயன்று உள்ளார்.


Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாள் வந்த நற்செய்தி.. தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்தது..!




அப்போது அந்த பெண்ணின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகன ஓட்டுனர் வாகனத்தை திருப்பி உள்ளார். இதில் நிலை தடுமாறி சுற்றுலா வாகனம் கவிழ்ந்துள்ளது. அப்போது சென்னையில் இருந்து குமுளி சென்ற கார் ஒன்று இந்த வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் 407 சுற்றுலா வாகனத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளனர். இதில் பயணித்த பயணிகளில் ஒரு சிலருக்கு மட்டும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது . அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயமும் உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.


MI Vs RR, IPL 2024: உள்ளூரிஜ்ல் வெச்சு செய்த சாம்சனின் ராஜஸ்தான் - இன்றைய லீக் போட்டியில் பழிவாங்குமா ஹர்திக்கின் மும்பை?




இதனை அடுத்து இந்த விபத்து சம்பவம் குறித்து உத்தமபாளையம் காவல்துறை அமைச்சர் தகவல் கிடைக்க பெற சம்பவ இடத்திற்கு உத்தமபாளையம் காவல்துறையினர் விரைந்துள்ளனர். காயமடைந்த அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பத்திரமாக அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காரில் வந்த நபர்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து நடந்ததன் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


சுமார் ஒரு மணி நேர போக்குவரத்து பாதிப்பின் காரணமாக வாகனங்கள் புறவழிச் சாலை வழியாக சுற்றி விடப்பட்டது. இந்த விபத்து சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.