பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சில ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது. அதன்படி, சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலில் (16127) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 11 வரையும் குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயிலில் (16128) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கீழடி அகழாய்வு: அகரத்தில் கிடைத்த 9 அடுக்கு உறைகிணறு - தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி !
மேலும் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் (20691) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 12 வரையும் நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயிலில் (20692) செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 12 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி இணைக்கப்படும். டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ரயிலில் (12689) செப்டம்பர் 9 அன்றும் மற்றும் நாகர்கோவில் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயிலில் (12690) செப்டம்பர் 10 அன்றும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும். கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர ரயிலில் (22667) செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 10 வரையும் நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர ரயிலில் (22667) செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 11 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படும்” என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்