தமிழ்நாடு அரசின் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் மாதம்  தாக்கல் செய்து பேசிய போது, ஏரிக்கரைகளிலும் சாலையோரங்களிலும் பனை மரங்களை வளர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும். பனை மரங்களைப் போற்றி பாதுகாக்கும் உன்னதப் பணியை அரசு உன்னிப்பாக மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.



இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

ஆனால் மதுரை மருத்துவக் கல்லூரியில் பனை மரங்கள் வெட்டப்பட்டு துண்டு, துண்டு போடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மருத்துவக்கல்லூரி தென் தமிழகத்திலேயே முதலாவதாக தொடங்கப்பட்ட கல்லூரி ஆகும். இக்கல்லூரி தொடங்கி 67 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கல்லூரி வளாகத்திற்கும் ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி அருகில் பல ஆண்டுகளாக இருந்த பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.




அரசு பனை மரங்களை பாதுகாக்க குரல் கொடுத்து வரும் நிலையில் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் இரண்டுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவை நன்றாக வளர்ந்த பனைமரங்கள் எனவும், கட்டிடத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் பனைமரங்கள் வெட்டப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர்...,” மதுரை பல இடங்களில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அதிக அளவு மரங்கள் வெட்டப்படுகிறது. ஒரு பக்கம் தொண்டு நிறுவங்களும், தனி நபர்களும் மரங்களை நட்டு விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ கல்லூரி நிர்வாகம் மாநில மரமான பனை மரத்தை வெட்டியது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்களுக்கு தெரிந்து நடந்ததா ? அல்லது தெரியாமல் நடந்ததா என தெரியவில்லை. எனவே மதுரை மருத்துவக்கல்லூரி நிர்வாகம் எஞ்சி இருக்கும் மரங்களையாவது காப்பாற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர்.

 

மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -மதுரை ஒலிம்பிக் வீராங்கனை வீரமணி ரேவதிக்கு ரயில்வேயில் பதவி உயர்வு !