தமிழ்நாட்டில் எலும்பு புற்றுநோய் மற்றும் எலும்பு நேர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு உதவியாக சென்னையில் மட்டுமே எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் எலும்பு வங்கி அமைக்கபட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதல்கட்டமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மற்றும் எலும்பு வங்கி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையால் பயன்பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிக்களை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் அதிகளவு தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினர்.
சமீபத்தில் தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 2 பட்டதாரி இளம்பெண்கள் தோற்றத்தில் திருநம்பிகளாக இருந்து வந்த நிலையில் இருவருக்கும் மாற்று பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு திருநம்பிகளாக மாற்றி மதுரை அரசு ராசாசி மருத்துவமனை சாதனை படைத்தது.
இந்நிலையில் தென் மாவட்டத்தில் முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமான பணிகள் 40 லட்ச ரூபாய் மதிப்பில் தொடங்கிய நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான பணிகள் முடியும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தென் மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இறந்த நபர்கள் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் எலும்புகளைக் கொண்டு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் நிலையில் அரசு மருத்துவமனையில் இந்த எலும்பு வங்கி வரும்பட்சத்தில் இலவசமாக பொதுமக்கள் பயனடைவர் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !