திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலட்சியத்தால் சாலையில் ஏற்பட்ட பள்ளம் தற்போது வரை சரி செய்யப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை நடுவே வாழை மரக்கன்றுகளை நட்டு வைத்து நூதன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திற்க்கு தினசரி 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. நத்தம் மொத்தமாக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

Continues below advertisement

Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!

Continues below advertisement

இந்நிலையில் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் முன்பாக சாலை மிகவும் சேதம் அடைந்து சாலையின் நடுவே ஆபத்தான நிலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இச்சாலை வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சென்று வரும் நிலையிலும் மேலும் இச்சாலை கடந்து தான் பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள் பலரும் கடந்து செல்கின்றனர்.

Chennai: "ஒரு வருஷத்துக்கு கவலை வேண்டாம்" சென்னைக்கு வராது தண்ணீர் பஞ்சம் - அடித்துச் சொல்லும் அதிகாரிகள்

பழுதடைந்த சாலையை சரி செய்யாததால் இவ்வழியாக செல்லும் பலரும் இருசக்கர வாகனங்களில் இருந்து கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனை செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது இச்சாலையை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பலமுறை முறையிட்டும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பழுதடைந்து நடுச்சாலையில் ஏற்பட்ட பள்ளத்திலேயே வாழை மரக்கன்றுகளை நட்டு வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திண்டுக்கல் உதவி கோட்ட பொறியாளர் ஒரு வாரத்திற்குள் முதல் கட்ட வேலைகள் துவங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் ஒரு வாரத்துக்குள் சாலை சீரமைக்கப்படவில்லை என்றால் மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.