கடந்த 2009 ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு. இந்த படத்தை பார்த்தவர்களுக்கு படம் நியாபகம் இருக்குமோ இல்லையோ நிச்சயம் ஒரு காட்சியை மறக்கவே முடியாது. அதுதான் சூரி...புரோட்டா சூரியாக மாறிய தருணம். 50 புரோட்டா சாப்பிடும் போட்டியில் கடைக்காரர் ஏமாற்ற முயல, மறுபடியும் எல்லா கோட்டையும் அழிங்க..நான் ஃபர்ஸ்ட்ல இருந்து சாப்பிடுறேன் என அதகளம் பண்ணி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார் சூரி. இந்நிலையில் இவர் தனது நெருங்கிய உறவினர்கள் மூலம் மதுரையில்  அம்மன் உணவகம் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். சூரியின் உணவகம் என சொல்லப்படும் உணவகத்தில் வணிகவரித்துறையினர் நேற்று சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான ஹோட்டல்கள் என சொல்லப்படும் உணவகங்கள் மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்மன்' என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன. சமீப காலத்தில் துவக்கப்பட்ட இந்த உணவகங்களில் வாடிக்கையாளரின் வருகை அதிகரிக்க தொடங்கியதால் வாடிக்கையாளரின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இதனால் எப்போதும் உணவகங்களில் கூட்டம் நிரம்பி காணப்படும்.






 

இந்நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல் என சொல்லப்படும் உணவகங்களில்  விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார் வந்துள்ளது. இதனையடுத்து அம்மன் உணவகங்களுக்கு தலைமையிடமாக இருக்கக்கூடிய  தெப்பக்குளம் பகுதியில் உள்ள அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் குழு சோதனை நடத்தினர்.  இச்சோதனையின் போது ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்பது உறுதியான நிலையில் 3 நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும்  உத்தரவிட்டுள்ளனர்.


 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர