1. தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து, 1.100  கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

 

2. ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்தில் நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் கல்லூரி மாணவர் விசாரணைக்கு சென்று மறுநாள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில்  நீதி மன்ற உத்தரவு படி  மீண்டும் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவரது ஊரில் உள்ள சுடு காட்டில் மணிகண்டன் உடல் குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது.

 

 

3. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விரைவில் சட்டக் கல்லூரியைத் தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், சிவகங்கையில் சட்டக் கல்லூரி தொடங்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

 

4. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியில் 5 மாத கர்ப்பிணி பெண் திடிரென வாந்தி மயக்கத்துடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

 

 

5. சிவகங்கை மாவட்டத்தில் ஆடுகளை திருடியதாக கல்லூரி மாணவர்கள் 6 பேரை போலஸீார் கைது செய்துள்ளனர்.

 

 

6. சிவகங்கை அருகே நாமனூரில் கண்மாய் தண்ணீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஷட்டர்கள் மீது ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

 

7. மதுரை காளவாசலில் 50 பயணிகளுடன் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஆறுமுகம்  மாரடைப்பால் உயிரிழப்பு. சாமர்த்தியமாக பேருந்தை இயக்கியதால் அதிஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் உயிர் தப்பினர்.

 

 

8. நெல்லை மாநகரில் புதிய திட்டங்கள், ரூ 110 கோடியில் புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற 12 திட்டங்களை நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

 

9.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த கிணற்றை காணவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


 

 

10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும்  6 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75572-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 7 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74304-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1185 இருக்கிறது. இந்நிலையில் 83 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.