விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன் மனைவி முனியம்மாள் ( வயது 65 ) . இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி உதவி கேட்டு கான்சாபுரம் ஊராட்சி அலுவலகத்தில்  விண்ணப்பம் செய்திருந்தார்.  இந்நிலையில் அங்கு ஊராட்சி செயலராக பணிபுரியும் கான்சாபுரம் மங்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனார் வயது 45 என்பவர்  முனியம்மாளிடம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி வந்திருப்பதாகவும் அதனைப் பெற 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதை சற்று கவனிக்கவும் - Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற -https://bit.ly/2TMX27X*



இதனால் முனியம்மாள் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.  இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான படையினர் மூதாட்டி முனியம்மாள் இடம் ரூபாய் 10 ஆயிரம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை  ஊராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த அய்யனார் இடம் கொடுக்கச் செய்தனர். அப்போது அய்யனார் லஞ்சப் பணத்தை பெற்றவுடன் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அலுவலகம் மற்றும்  அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 








 

இது குறித்து விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம்....,” ஏழ்மையான நிலையில் தான் பலரும் அரசியின் சலுகையை எதிர்பார்த்து மானியத்தில் வீடுகட்டுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் இறங்கு கின்றனர். இந்த சூழலில் அவர்களின் ஏழ்மை நிலையை கூட உணராமல் அவர்களிடமும் லஞ்சம் வாங்கு போக்கு நடைபெறுகிறது. இது போல் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறைக்கப்படும் என தெரிவித்தனர்.