கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க டிசம்பர் 25 அன்று மதுரை வழியாக நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாகர்கோவில் - டாக்டர் எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் ஒரு வழி சிறப்பு ரயில் (06046) நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 25 அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
- விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி வட்டியில்லா கடன் - அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!
டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் இயங்கும்.
பராமரிப்பு பணிகளுக்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும். ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் (12641) மற்றும் மறுமார்க்கத்தில்
ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் (12642) ஆகியவை வழக்கம்போல் இயங்கும். இந்த ரயில்கள், வடக்கு ரயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில் பாதை மற்றும் சைகை (Signal) மேம்பாட்டு பணிகளுக்காக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பனை விதையில் அழகான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, அசத்தல் விழிப்புணர்வில் மதுரையின் பசுமை ஆர்வலர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Southern Railway: இனி கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு வாராந்திர ரயில்! ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார் பிரதமர்!