சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவபட்டதை நேரலையில் கண்டுகளித்து கைதட்டி உற்சாகமடைந்த மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள்.


உலக நாடுகளே உற்று நோக்கிய சந்திரயான் 3 சரியாக மதியம் 2.35 மணி அளவில் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. இதற்கான 25 மணி நேர 30 நிமிட கவுண்டவுன் நேற்று மதியம் 1.05 மணிக்கு தொடங்கியது. பலமுறை சோதனை செய்தபின், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட பின் விஞ்ஞானிகளால் மிகவும் கவனமாக சந்திரயான் 3 உருவாக்கப்பட்டது. பலரின் கனவு மெய்ப்படும் வகையில் இன்று இஸ்ரோ வரலாற்றுச் சாதனையாக இன்று வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  




இந்நிகழ்வை மதுரை மஞ்சணகாரத்தெரு பகுதியில் உள்ள சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணாக்கர்கள் நேரலையில் கண்டுகளிக்கும் வகையில் அப்பள்ளியின் வானவில் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பள்ளி அறையில் பெரிய அளவிலான திரை மூலமாக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவுவதை பள்ளியில் ஸ்மார்ட் போர்டு வழியாக நேரலையில் கண்டுகளித்தனர். விண்கலம் விண்ணில் செலுத்தும் போது கவுண்டவுன் தொடங்கியவுடன் 10 முதல் உற்சாகத்துடன் சப்தமிட்டு கவுண்டவுன்களை தொடங்கிய மாணாக்கர்கள் விண்ணில் புறப்பட்டபோது கைதட்டி ஆரவாரத்துடன் உற்சாகமடைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முன்னதாக பள்ளி வளாகத்தில் இஸ்ரோவின் சாதனைகள் மற்றும் இஸ்ரோ நிகழ்வுகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது இதனை ஏராளமான மாணாக்கர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.



 



சந்திராயன் 3 விண்கலம் ஏவப்பட்ட நிகழ்வினை மாணாக்கர்களுடன் ஆசிரியர்களும் கண்டு மாணாக்கர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.  இந்த நிகழ்வினை நேரலையின் போது விண்கலம் ஒவ்வொரு பகுதியா செல்வது குறித்தும் விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்தும் தலைமை ஆசிரியர் ஜோசப் மாணாக்கர்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்வையொட்டி பள்ளி முழுவதும் ராக்கெட் உருவப்படங்கள் வரைந்தும் , இஸ்ரோ ஏவுதளம் போன்றும் அமைக்கப்பட்டது. இது குறித்து பேசிய மாணாக்கர்கள் முதன்முறையாக விண்கலம் ஏவப்பட்டதை நேரலையில பார்த்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், சந்திராயன் -3 விண்கலம் வெற்றிபெற வேண்டும் என பிராத்திப்பதாகவும் தெரிவித்தனர்.


 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண