திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் உள்ள வண்டி காளியம்மன் கோவிலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உற்சவ திருவிழா நடைபெற்றது. 28 எருமை கிடாக்கள் பலியிட்டு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அம்மாபட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ வண்டி காளியம்மன் கோவில் உற்சவ விழா நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்த விழாவானது கடந்த ஜூன் மாதம் 30ந் தேதி சாமி சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கடந்த 11ஆம் தேதி மாங்கரை ஆற்றுக்கு சென்று கரகம் பாலித்து கோவில் வந்தடைந்தது.


Veeramuthuvel Chandrayaan : சந்திராயன் 3-க்கு மூளையாக செயல்பட்ட தமிழன்.. ஐஐடி மெட்ராஸில் படிப்பு.. உலகை நாடுகளை மிரள வைத்த வீரமுத்துவேல்!




பன்னிரண்டாம் தேதி புதன்கிழமை மாவிளக்கு எடுத்தல், பூச்செட்டி எடுத்தல், அலகு குத்தி பொங்கல் வைத்து தங்களது வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றினர். பின்னர் இரவு கோவிலின் முக்கிய நிகழ்வான உற்சவ மூர்த்தி அம்மன் அலங்கரிக்கப்பட்டு மின்விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வடம் பிடித்து தேர் பவனி தொடங்கியது. அதைத் தொடர்ந்து முக்கிய தெருக்களின் வழியாக பூஜைகளை ஏற்று  நேற்று மாலை அம்மன் திருத்தேர் கோவில் வந்தடைந்தது.


DMK MP's Meeting: நாடாளுமன்ற கூட்டத்தொடர், பொது சிவில் சட்ட பிரச்சினை? இன்று கூடுகிறது திமுக எம்.பிக்கள் கூட்டம்..!




அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனுக்காக நேர்ந்து விட்ட எருமை கிடாக்களை பலியிட்டனர். மாங்கரை, அம்மாபட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 28 எருமை கிடாக்களை பக்தர்கள் கொண்டு வந்திருந்தனர். வரும் 15ஆம் தேதி சனிக்கிழமை முளைப்பாறியுடன் கரகம் எடுத்து கங்கை சென்றடைந்து திருவிழா முடிவடையும் என தெரிவித்தனர். திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண