ஒவ்வொருவரும் சராசரியான சூழலில் படித்து முடித்து, வேலை கிடைத்து, அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதையே சவாலாகப் பலர் கருதுகிறோம். ஆனால், அசாதாரணச் சூழல்களை எதிர்கொண்டு சாதித்துக்காட்டும் சிலரும் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான கால் பந்து விளையாட்டின் கேப்டன் பாலா. தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இன்றி வசித்து வருகிறார் மாற்றுத்திறனாளி பாலா.
தேனி மாவட்டம் கோட்டூரில் வசிக்கிறார் 26 வயதான பாலா. இவருக்கு பிறந்ததில் இருந்தே ஒரு கை இல்லாமல், குறைபாடு இருந்துள்ளது . இருந்தும் சோர்வு அடையாத இவர் சிறு வயதில் இருந்தே கால் பந்து பயிற்சி பெற்றுள்ளார். பள்ளியில் தனது விளையாட்டு பயணத்தை தொடங்கிய இவர் தற்போது இந்திய கால் பந்து மாற்றுத்திறனாளி அணியின் கேப்டனாக உள்ளார்.இவர் சிறு வயதில் இருந்தே பல போட்டிகளில் விளையாடி நூற்றுக்கணக்கான கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளார்.
இளம் வயதில், ஊருக்கு அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். கடந்த 21 ஆண்டுகளாக வெறும் தோல்வியை மட்டுமே சந்தித்த அந்த அணி, பாலா அளித்த பயிற்சிக்கு பின்னர்,, மாவட்டம் அளவிலான போட்டியில் வெற்றிப் பெற்று, மாநில அளவிலான போட்டிற்கும் தகுதியும் பெற்றது.
ஆரம்பகட்டத்தில் தனது நண்பர்கள் மூலமே உதவி கிடைத்ததும் என்றும், தற்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல போதிய உதவி இல்லாமல் தவிப்பதாக கூறுகிறார் பாலா. தங்களின் பயணச்செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டியதால் மிகவும் கடுமையான சூழல் உள்ளதாக கூறினார். மாற்றுத் திறனாளிகளுக்கான கால்பந்து போட்டியில் சாதிக்க துடிக்கும் இவரின்
செலவுகளை தாங்களே பார்த்துக்கொள்வதாலும், தங்களின் குடும்பங்களை கவனிக்க சிரமமாக உள்ளதாலும், அரசு தங்களுக்கு அரசு வேலை ஒன்றை வழங்கினால், மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார் பாலா.
உலக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற போகிறது. அதற்காக தற்போது தீவிரப் பயிற்சி மேற்க்கொண்டு வருவதாகவும். அதில் தன்னை போன்றவர்களும் கலந்துகொண்டால் நிச்சயம் பதக்கம் வென்றுவிடலாம் என கூறுகிறார். மேலும், என்னைப் போன்று தமிழகத்தில் நிறைய பேர் உதவி கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இது போன்று போட்டிகளில் கலந்துகொண்டால் அவர்களின் அரசு நிவாரணம், உதவித் தொகை வழங்கி வருகிறது. என்னைப்போன்ற ஒருவருக்கு பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் வேலையை கூட அரசு வழங்கி உள்ளது. இதேபோன்று, எங்களுக்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என்றார் வேதனையுடன்.
மேலும் பார்க்க,
முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku
மேலும் தெரிந்துகொள்ள,