மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் சிவகாசியில் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். இவர் நல்லிவீரன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் மாடியில் வைத்து சட்டவிரோதமாக வெடி தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டாசு தயாரிப்பு பணியின் போது வெடி விபத்து ஏற்பட்டது.  இந்த வெடி விபத்தில் மாடி முழுவதும் இடிந்து சிதறியது, இதில் தேங்கல்பட்டியைச் சேர்ந்த அஜித் பாண்டி என்ற தொழிலாளி 100 மீட்டர் தொலைவிற்கு உடல் சிதறி பலியானார்.




மேலும் கீழ் வீட்டில் வாடகைக்கு குடி இருந்த விவிதா என்ற பெண் மற்றும் அவரது ஒன்பது மாத கைக் குழந்தை ஹர்சிதா என இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டாசுகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சூழலாலும், இடிந்த நிலையில் உள்ள வீட்டுக்குள் செல்ல முடியாத நிலையில் தடயவியல் மற்றும் மோப்ப நாய் கொண்டு மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வீட்டின் உரிமையாளரான பிரவீனை தேடி வருகின்றனர்.




இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் ”பிரவீன் பட்டாசுக் கடைக்கு தேவையான பட்டாசுகளை பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். அவரது வீட்டு மாடியிலும் பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் பட்டாசு தயார் செய்ய மருந்துகள் கலக்கும் போது வெடித்திருக்கலாம். இது மிகப்பெரும் பாதிப்பாக ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பிரவீனுடன் வேறு நபர்கள் தொடர்பு ஏற்படுத்தி பட்டாசு தயாரித்துள்ளனரா, எங்கு எங்கு பட்டாசு தயாரித்துள்ளனர் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.




மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Local Body Election: | 'போட்டியின்றி தேர்வாக ஆசைப்படுகிறார்கள்; ஜனநாயகத்தை காக்க வேண்டும்' : சுயேட்சை வேட்பாளருக்கு தொடரும் மிரட்டல்?


இந்தாண்டு 2022-ஆண்டு தொடக்கத்தில் முதல் நாளே விருதுநகரில் பட்டாசு விபத்து ஏற்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து விருந்து சிவகாசி சாத்தூர் பகுதியில் பட்டாசு விபத்தானது ஏற்பட்டது. தற்போது மதுரை மாவட்டத்திலும் பட்டாசு விபத்து ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று சட்ட விரோதமாக பட்டாசு தயார் செய்யும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai corporation election 2022 | “எடப்பாடி முடிந்தா இதை செய்யட்டும்... சவால் விடுகிறேன்..” - உதயநிதி ஸ்டாலின்