Madurai | சுற்றுலாத்தலமாக மாறும் மதுரை வண்டியூர் தெப்பக்குளம்.. இனி போட்டிங்!
”மதுரை தெப்பக்குளம் சுற்றுலா தலமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும்” - நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் தகவல்
Continues below advertisement

தெப்பக்குளம்
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் மீண்டும் படகு சவாரியை அமைச்சர் இன்று துவக்கி வைத்தார். கடந்த சில மாதங்களாக மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சவாரிக்கு நீர் குறைந்து காணப்பட்டதாலும், கொரோனா ஊரடங்கு காரணமாகவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களின் கோரிக்கையை கருத்தில்கொண்டு மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சேவையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறையமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், எம்.எல்.ஏ. பூமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்...,” மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீண்டும் மூன்று படகு மூலம் படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. இந்த தெப்பகுளத்தில் தண்ணீர் இல்லாம் இருந்த சமயத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக பயன்படுத்தி வந்தனர். மேலும் சிலர் அசுத்தம் செய்து வந்தனர். இந்நிலையில் இதன் முக்கியதுவம் கருதி தண்ணீர் நிரப்பும் பணிகள் நிறைவு செய்யப்பட்டது. தற்போது நீர் நிரம்பி இருக்கும் இந்த குளத்தை பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை சுற்றுலா தலமாக மாற்ற ஏற்பாடு செய்ய முயற்சி எடுக்கப்படும்.
உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகமான எம்.ஐ.டியில் நிதி தொடர்பாக படிக்க சென்ற போது, செயில் போட் ஓட்டிய அனுபவம் உள்ளது. அதனால் அது போன்ற விசயங்களை அமைக்க யோசனை உருவாகிறது. எனவே தெப்பக்குளம் மேம்பாடு செய்யப்படுவது குறித்து யோசிக்கப்படும். இதனால் மதுரை மாநகராட்சிக்கும், இந்து அறநிலையத்துறைக்கும் வருவாய் ஈட்ட முடியும். தற்போது துவங்கி போட் நபருக்கு தலா 20 ரூபாய் என்ற கட்டணத்தில் இயக்கப்படுகிறது” என்றார்.
தமிழ்நாடு அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒலி, ஒளி காட்சியை கண்டு களிக்கும் விதமாக கடந்த 27-ம் தேதி முதல் திருமலை நாயக்கர் மஹாலில் ஒலி, ஒளி காட்சிகள் மாலை 6.45 மணி முதல் 7.35 மணி வரை ஆங்கிலத்திலும் மற்றும் மாலை 8.00 மணி முதல் 8.50 மணி வரை தமிழிலும் நடைபெறவுள்ளதா, மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை மக்கள் மிகவும் எதிர்பார்த்த தெப்பக்குளம் படகு சவாரி துவங்கியது மதுரை மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - குறைந்தது உள்ளூர் பக்தர்களின் வருகை ; பொலிவு பெறுமா மீனாட்சியம்மன் கோவில் !
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.