1. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் காந்தி சிலை அருகே காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு நடைபயணத்தை கார்த்தி சிதம்பரம் எம்.பி. தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது," காலையில் தக்காளி விலையை விசாரித்தேன் ரூ.180 என்கின்றனர். இந்த அவல நிலைக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார முடிவுதான் காரணம். உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தலில் விவசாயிகள் பி.ஜே.பி.யை விரட்டி அடிப்பார்கள் என்ற அச்சத்திலேயே வேளாண் சட்டங்களை மோடி வாபஸ் பெற்றுள்ளார். மக்கள் சக்தியால் கண்டிப்பாக இந்த சர்வாதிகார ஆட்சியை தோற்கடிக்க முடியும் என்ற உறுதியோடு காங்கிரஸ் செயல்படும், என்றார்.

 

 

2. சிவகங்கை மாவட்டத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுவதால் சிங்கம்புணரி, திருப்பத்தூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

3.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது தொடர்ச்சியாக அவதூறு பரப்பும் யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. ரூபாய் 25 ஆயிரத்தை அவர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும் எனவும் ஜாமீனில் வெளியில் இருக்கும் போது மீண்டும் அவதூறு பரப்பினால் ஜாமீனை ரத்து செய்ய நேரிடும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை.

 

 

4. மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்ற பெயரில் அமைப்புகள் நடத்துவோர் மற்றும் தனி நபர்களின் சட்டவிரோத நடவடிக்கை மற்றும் கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைகளை தடை செய்யவும், சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு. இது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறை டிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளாரே என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 30க்கு தள்ளி வைத்தனர். 

 

 

5. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பள்ளம் பகுதியில் உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்காக மூன்றுபேர் கொண்ட இந்திய வான்வெளி போக்குவரத்துத்துறை தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

 

6. மத்திய அரசை கண்டித்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த  வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலை தொழிலா ளர்கள் சுமார் 500 பேர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

7. வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தங்கள் வசிப்பிடங்களில் மழை நீர் முறையாக வெளியேற்றப்படாமல் தேங்கியிருந்தால், (-https://nellaineervalam.in/waterlogging-) என்ற இணைய தளம் வழியாக பொது மக்களே நேரிடையாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம்.  பதிவு செய்யப்படும் விபரங்கள் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

 

 

8. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் இரவு நேர பயணத்தை தவிர்க்கக்கோரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

9. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்- தண்ணீரை வெளியேற்ற மின் மோட்டார்களை கொண்டு மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம்


 

10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும்  10 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75487-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 10 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74180-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1182 இருக்கிறது. இந்நிலையில் 125 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.