பாஜக அண்ணாமலை ஒரு துப்பறிவாளன் ஜேம்ஸ்பாண்ட். திமுக அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இல்லையென்றன்றால் அண்ணாமலை நீதிமன்றம் சென்றுவிடுவார்-பாஜக அண்ணாமலையை புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு


“17 வயது; ஹோட்டலில் பாலியல் தொல்லை; அம்மா மன்னிப்பு கேட்டார்” - பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடூரம்


மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் தீர்மான நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா சோழவந்தான் அருகே உள்ள திருவேடகத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.


KG Admission: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூட தமிழக அரசு உத்தரவு




பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:


தமிழகத்தில் முதன்மையான எதிர்கட்சியாக செயல்படுவது அதிமுக தான் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்


பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றார் எனென்றால் அவர் முன்னாள் IPS அதிகாரி


அவர் ஒரு "துப்பறிவாளன்" இந்தியா முழுவதும் உள்ள உளவுத்துறை தகவல் அவருக்கு வந்துசேரும் தமிழக அரசோ மாநில உளவுத்துறை தகவல் மட்டுமே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்.


Breaking News Tamil LIVE: சிதம்பரம் கோயில் கணக்கு விவரங்களை கொடுக்க தீட்சிதர்கள் மறுப்பு




எனவே அண்ணாமலை துப்பறிந்து என்ன ஊழல் செய்கிறார்கள் என்று ஆராய்ந்துகொண்டே புள்ளிவிவரத்துடன் அறிக்கை வெளியிடுவார்


திமுகவினர் பாஜக அண்ணாமலையிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை என்றால் அண்ணாமலை நீதிமன்றம் செல்வார் 


திமுகவினர் அண்ணாமலையிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்






திராவிட மாடல் என்பது திராவிடத்தை தமிழகத்தில் வளர்க்க திமுக முன்வரவில்லை முழுக்க முழுக்க முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தும் நிகழ்ச்சியே திராவிட மாடல் 


திராவிட மாடல் என்பது தமிழக மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்று முன்னால் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண