Breaking News Tamil LIVE: சிதம்பரம் கோயிலில் ஆய்வு - அறநிலையத்துறை அதிகாரிகள் மீண்டும் வருகை

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 07 Jun 2022 05:19 PM
சிதம்பரம் கோயிலில் ஆய்வு - அதிகாரிகள் மீண்டும் வருகை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வதற்காக அறநிலையத்துறையின் அதிகாரிகள் குழு மீண்டும் வருகை 

மாவட்ட வாரியாக இனி செஸ் போட்டிகள்.. மாஸ் உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு..!

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 10 முதல் 26 ம் தேதி வரை மாவட்ட வாரியாக செஸ் போட்டிகள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த செஸ் போட்டிகளை தமிழ்நாடு அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து நடத்துகின்றன. 


ஒவ்வொரு மாவட்டத்திலும் வெற்றிபெறும் 2 மாணவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்க்க அனுமதிக்கப்படும் என்றும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் http:prs.aicf.in/players- இல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு கடிதம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் 


ஜூன் 24ம் தேதியுடன் ஆணையம் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை வரை நீட்டிப்பு வழங்க அரசுக்கு கடிதம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - 10 மாவட்டங்களில் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 10 மாவட்டங்களில் இன்று  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் கோயில் கணக்கு விவரங்களை கொடுக்க தீட்சிதர்கள் மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக கணக்கு விவரங்களை கொடுக்க தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.  கோயிலில் ஆய்வு நடத்த சட்டரீதியாக அணுகவில்லை என தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2 நாள் ஆய்வை தொடங்கியது அறநிலையத்துறை விசாரணைக்குழு. கோயில் நிர்வாகத்தின் வரவு,செலவு உள்ளிட்டவை பற்றி 5 பேர் கொண்ட குழு கணக்கு கேட்கிறது.

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் ஐடி ரெய்டு

சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்தியாவில் ஒரேநாளில் 2,513 பேர் டிஸ்சார்ஜ், 7 பேர் பலி

இந்தியாவில் ஒரேநாளில் 2,513 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொற்றுக்கு 7 பேர் உயிரிழந்தனர். 

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று, நாளை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை - அரக்கோணம் பிரிவில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

இன்று மதுரை செல்கிறார் முதலமைச்சர்

இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை மதுரை செல்கிறார்.

Background

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 90 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 862 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 56 ஆயிரத்து 173 ஆக உள்ளது.


மாவட்டங்கள் நிலவரம்:


அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 48 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 பேரும் கொரோனா தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் யாரும் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.


உயிரிழப்பு:


தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என   மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 025 ஆக உள்ளது.


பரிசோதனை:


தமிழ்நாட்டில் இன்று மட்டும் 11 ஆயிரத்து 166 பேருக்கு கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 6.670628200 கோடிக்கு மேல் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.