Just In
“நான் நினைத்த வேண்டுதல் நிறைவேறியது”; யாக பூஜையில் குடும்பத்துடன் கலந்துகொண்ட பிரபல நடிகர்

பொறுத்திருந்து பாருங்க ; ஒரு கட்சி கூட்டணிக்கே உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை- எடப்பாடி பழனிசாமி அதிரடி

பென்னாகரம் பார்முலாவை சேலத்தில் பயன்படுத்த உள்ளேன் - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்

India Pakistan: அப்படி வாங்க வழிக்கு”தண்ணீருக்காக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்” பாக் பிரதமர் பேச்சு
Top 10 News Headlines: சிறுவனுக்காக குவிந்த கூட்டம், சிக்கிய பல் மருத்துவர், எகிறிய தங்கம் - டாப் 10 செய்திகள்
Madurai DMK | பதவிகள் விற்பனை.. போஸ்டரில் போர்.. உட்கட்சி பூசலில் வெடித்துச்சிதறும் மதுரை திமுக!
மதுரை வடக்கு மாவட்ட தி.மு.கவிற்குள் கடும் உட்கட்சி பிரச்னை எழுந்துள்ளது. இதனால் தி.மு.க தென்மாவட்டத்தில் அரசியல் காரசாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement

போஸ்டர்
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் கலந்து கொள்ளவந்த தி.மு.கவினரிடையே மோதல் ஏற்பட்டு நிர்வாகி ஒருவருக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் சிவகங்கை தி.மு.கவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.கவிற்குள் கடும் உட்கட்சி பிரச்னை எழுந்துள்ளது. இதனால் தி.மு.க தென்மாவட்டத்தில் அரசியல் காரசாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக பொன் முத்துராமலிங்கம் இருந்துவருகிறார். தேர்தலுக்கு முன்பில் இருந்தே இதே பதவில் தான் வகித்து வருகிறார். இந்நிலையில் தி.மு.க ஆட்சியமைத்தற்கு பின் தற்போது ஆக்டிவாக மாறிவருகிறார். தனது மகன் பொன் சேதுவுக்கு அல்லது மருமகளுக்கு மேயர் பதவி வாங்கி விடவேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை வடக்கு மாவட்டத்தில் பொறுப்புகளை தனக்கு விஸ்வாசமான ஆட்களுக்கு மட்டும் வழங்குவதாக புகைச்சல் இருந்து வருகிறது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக பாதிக்கப்பட்ட தி.மு.க தொண்டர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதில்
"மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக பதவிகள் விற்பனைக்கு உள்ளது
தகுதி : குண்டாஸ் பெற்றவர்கள்.
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு ரூ.5.00 இலட்சம்.
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட பகுதி செயலாளர் பொறுப்பிற்கு ரூ.3.00 இலட்சம்.
மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் பிரதிநிதி பொறுப்பிற்கு ரூ.3.00 இலட்சம்.
மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் வட்ட செயலாளர் பொறுப்பிற்கு ரூ.2.50 இலட்சம்,
பணம் இருந்தால் பதவி உண்டு பகுதிக்குள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
உழைத்தவனுக்கு ஒன்றும் இல்லை. பணம் இருந்தால் கட்டாயம் பதவி உண்டு.
இப்படிக்கு,
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக உண்மை தொண்டன்" என தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
இதனால் தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம் எதிராக தங்களது ஆதங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தி.மு.க பொன் முத்துராமலிங்கம், தனது கெத்தை காட்ட தன் பிறந்தநாள் விழாவை யானை, குதிரை வரவலைத்து கொண்டாடினார். தற்போது அவர் மீது சர்ச்சை எழுந்தது தி.மு.க தலைமைக்கு ஓலை சென்றுள்ளது. இதனால் தி.மு.க தலைமையில் இருந்து பொன் முத்துராமலிங்கத்திடம் இது குறித்து பேசியுள்ளதாக தகவல் கசிகிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.