பீகார் தேர்தல் முடிவு ஜனநாயகத்தின் மீது  இளைஞர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை தகர்த்துள்ளது. அதிகாரம் மற்றும் பணம் இருந்தால் தேர்தலில் வெற்றி அடையலாம். தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கையற்ற தன்மையால் வெற்றி அடைந்துள்ளதாக இயக்குநர் கௌதமன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


பீகார் சட்டமன்ற தேர்தலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. முதற்கட்டத்தில் பதிவான 65.08 சதவிகித வாக்குகளே சாதனையாக கருதப்பட்ட நேரத்தில், இரண்டவது கட்டத்தில் 68.76 சதவிகித வாக்குகள் பதிவாகின.  2020ம் ஆண்டு தேர்தலில் பதிவான 57.29 சதவிகிதத்தை காட்டிலும், 9.62 சதவிகித கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.  இந்நிலையில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், நிதிஷ்குமார் உட்பட பல்வேறு தரப்பினரும் பாஜக கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. 




இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்த திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான கௌதமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திரைப்பட தயாரிப்பாளர் வி. சேகர் மறைவுக்கு இரங்கலையும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த கௌதமன்  "ஜனநாயகத்தின் மீது இளைஞர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தகர்ந்து உள்ளதாகவும், அதிகாரம் மற்றும் பணம் இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியும், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாரதிய ஜனதா கட்சி மற்றும் நிதீஷ் குமார் தீர்மானித்தது நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்."மேலும் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.




வரும் தேர்தலில், தொகுதிக்கு ரூ.10 கோடி என தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி செலவிட்டு அரசியல் கட்சிகளுக்கு உடன் நிற்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை பேரம் பேசி வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் படித்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக வரும் தகவல்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த கௌதமன், "தீவிரவாதம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல ஆனால் படித்த இளைஞர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால் இது அரசாங்கத்தால் ஆராயப்பட வேண்டியது. சமூக கட்டமைப்பின் போக்கு எப்படி உள்ளது என்பதை அரசாங்கமும், ஆட்சியாளர்களும் நீதிமன்றங்களும் ஒரு குழு அமைத்து பரிசீலனை செய்ய வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.